தமிழகம் முழுவதும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு இனி இ-மெயில் முகவரிக்கு கிடைச்சுடும்!

 

தமிழகம் முழுவதும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு இனி இ-மெயில் முகவரிக்கு கிடைச்சுடும்!

தேர்வு முடிந்ததும் பெற்றோர்களின் கையெழுத்துக்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கப்படுவது இதுவரையில் வழக்கமாக இருந்து வந்தது

கல்வி துறையில் அதிரடியாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை, இனி, பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள், மதிப்பெண்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ரிப்போர்ட் காட்டுகளை இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவை பெற்றோர்களின் கவனத்திற்காக ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் பெற்றோர்களின் கையெழுத்துக்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கப்படுவது இதுவரையில் வழக்கமாக இருந்து வந்தது.

school

இதுவரையில், ரிப்போர்ட் கார்டுகளை வழங்குவதற்காக பெரும் குவியலான அட்டைகள் தேவைப்பட்டு வந்தன. தவிர, மாணவர்களின் செயல்பாடுகள் நேரடியாக பெற்றோர்களின் கவனத்திற்கு செல்கிறதா என்பதிலும் உறுதியளிக்க இயலாமல் இருந்தது. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பி வைக்கப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

dpi

மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த செயல் திட்டம் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.