தமிழகம் முழுவதும் பிரபல ஹோட்டல்களில் ஐ.டி.ரெய்டு

 

தமிழகம் முழுவதும் பிரபல ஹோட்டல்களில் ஐ.டி.ரெய்டு

தமிழகம் முழுவதும் 32 பிரபல உணவகங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை: தமிழகம் முழுவதும் 32 பிரபல உணவகங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள உணவகங்களான சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களின் அனைத்துக் கிளைகள், இயக்குனர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்கள் என இந்நிறுவனங்களுக்கு சொந்தமான, மாநிலம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உணவகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்ததை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.

சைவ, அசைவ உணவுப் பிரியர்களுக்கு பிடித்த உணவகங்களான சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.