தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்

 

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்

தமிழகம் முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: தமிழகம் முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை இன்றும், நாளையும் நாடு முழுவதும் கொண்டாடபப்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் இன்று வழக்கம் போல் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியலை முடித்து, புத்தாடை அணிந்து, கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகள் வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிபெற்று தீப ஒளித்திருநாளை கொண்டாடி வருகின்றனர். பலாகாரம் உள்ளிட்ட தின் பண்டங்களை செய்து அக்கம் பக்கதினருக்கு கொடுத்து மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையும் உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளதால், அந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.