தமிழகம் முதலிடம்.. பிரதமரிடம் இருந்து விருது பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்

 

தமிழகம் முதலிடம்.. பிரதமரிடம் இருந்து விருது பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியாவிலேயே நுண்ணீர் அமைப்புகள் செயல்படுத்தப்பட்ட பரப்பளவில் தமிழகம் முதலிடம் பிடித்தது. 

கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் அதிரடி நடவடிக்கையால்  1.42 லட்சம் ஹெக்டேரில் ரூ.700.69 கோடி நிதி மூலம் நுண்ணீர் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே நுண்ணீர் அமைப்புகள் செயல்படுத்தப்பட்ட பரப்பளவில் தமிழகம் முதலிடம் பிடித்தது. 

ttn

நுண்ணீர் அமைப்புகள் மூலம் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழக வேளாண் துறை முதலிடத்தில் இருப்பதால், மத்திய அரசு  ‘கிரிஷி கர்மான்’ என்னும் விருதை வழங்க உள்ளதாகவும், ஜனவரி 3 ஆம் தேதி(இன்று) தும்கூரில் நடைபெற உள்ள விழாவில், தமிழக வேளாண்துறைக்குப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ளார் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டது. 

ttn

அதன் படி , இன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம்  இருந்து தமிழக அரசின் வேளாண்துறை சார்பாகக்  கிருஷி கர்மான் விருதை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில், முதன்மைச் செயலர் ககன்தீப் சிங்  உள்ளிட்ட தமிழக அரசின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் முதலிடம் பிடித்து தமிழக வேளாண் துறை 5 ஆவது முறையாக இந்த கிருஷி கர்மான் விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.