தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தோடு நிறைவடைகிறது என்றும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தோடு நிறைவடைகிறது என்றும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  தெரிவித்திருந்தார். அதே போல, இன்று காலை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

ttn

அதனைத் தொடர்ந்து, லட்சத்தீவு கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் லேசான மழை என்றும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.