தமிழகம், புதுவையில் 5,970 வழக்கறிஞர் சஸ்பென்ட்; பார் கவுன்சில் அதிரடி!

 

தமிழகம், புதுவையில் 5,970 வழக்கறிஞர் சஸ்பென்ட்; பார் கவுன்சில் அதிரடி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேமநல நிதியை செலுத்தாத 5,970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேமநல நிதியை செலுத்தாத 5,970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் சேமநல நிதி செலுத்த வேண்டும் என்பது 1993-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிதித் திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்கள் அனைவரும் பார் கவுன்சிலின் இந்த நலத் திட்டதின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பார்கவுன்சில் விதிப்படி, நல நிதிக்கான சந்தா செலுத்தாத தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தா செலுத்தும் வரை நீதிமன்றங்களில் ஆஜராக கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.