தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பருவ மழை கடந்த மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்த நிலையில், குளிர் காலம் நிலவி வருகிறது

தமிழகத்தில் பருவ மழை கடந்த மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்த நிலையில், குளிர் காலம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் பகல் நேரத்தில் கடும் வெயிலும் என மாறி மாறி காலநிலை இருந்து வருகிறது. வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. அதே போலக் குமரி மாவட்டத்தில் வெயில் அதிகமானதால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு சில பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், நேற்று முன் தினம் மழை வெளுத்து வாங்கியது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

அதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.