தமிழகமே மோடியின் பின்னால் இருக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி

 

தமிழகமே மோடியின் பின்னால் இருக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி

பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். தமிழகம் அவர் பின்னால் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கன்னியாகுமரி: பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். தமிழகம் அவர் பின்னால் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். வெவ்வேறு சாலை மற்றும் மேம்பால திட்டங்களை மோடி திறந்து வைத்தார்.

இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , “கன்னியாகுமரியில் முக்கடல் மட்டுமல்ல மூன்று மதங்களும் சங்கமிக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. மீனவர்களுக்காகத் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களைக் கொண்டுவந்துள்ளது. விவசாயத்துக்காகத் தடுப்பணைகள் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலை முறியடித்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கடலில் காணாமல்போகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க கன்னியாகுமரியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன். பிரதமர் மோடி இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார். தமிழகம் அவர் பின்னால் இருக்கிறது” என்றார்.