தமிழகத்தை ஆளப்போகும் ரஜினி!  வீரமா முனிவரை என்ன செய்வார் சீமான்?

 

தமிழகத்தை ஆளப்போகும் ரஜினி!  வீரமா முனிவரை என்ன செய்வார் சீமான்?

தமிழகத்தையும், தமிழர்களையும் ஆள்வதற்கு ரஜினிக்கு தகுதி கிடையாது. ரஜினி தமிழர் கிடையாது என்பது தான் முதல் வரிக்கு காரணமாக சீமான் உள்ளிட்டவர்கள் ரஜினி மீது வைத்து வரும் விமர்சனம். இதுநாள் வரையில் பாஜகவின் கைக்கூலியாக தான் ரஜினியைப் பார்க்கிறோம் என்றவர்கள் எல்லாம் இன்று பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசியதும் வாயடைத்துப் போனார்கள். 

தமிழகத்தையும், தமிழர்களையும் ஆள்வதற்கு ரஜினிக்கு தகுதி கிடையாது. ரஜினி தமிழர் கிடையாது என்பது தான் முதல் வரிக்கு காரணமாக சீமான் உள்ளிட்டவர்கள் ரஜினி மீது வைத்து வரும் விமர்சனம். இதுநாள் வரையில் பாஜகவின் கைக்கூலியாக தான் ரஜினியைப் பார்க்கிறோம் என்றவர்கள் எல்லாம் இன்று பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசியதும் வாயடைத்துப் போனார்கள். 
எங்கேயோ இத்தாலியில் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியாக பிறந்து, இன்றும்  இங்கே வீரமாமுனிவராக போற்றப்படுபவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் செய்த சேவைகளை இங்கே அவருக்குப் பின்னால் வந்த எந்த தமிழ் அறிஞர்களும் செய்யவில்லை. அப்படிப்பட்ட வீரமாமுனிவரோட பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம். நவம்பர் 8ஆம் தேதி 1680ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்து கிறிஸ்தவ குருவாக, அம்மதத்தை பரப்புவதற்காக 1710ஆம் ஆண்டு கோவாவுக்கு வந்து, அங்கிருந்து தமிழகத்திற்கு வந்தார் வீரமாமுனிவர். 

veeramaamunivar

தமிழ் அவரைத் தன்னுள் ஈர்க்க, தனது இயற்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார். இலக்கணம், இலக்கியம், அகராதி என பலவற்றை தமிழ் மொழியில் எழுதிக் குவித்தார். 
எளிய மக்களும் புரியும் வகையில் உரைநடை தொகுத்ததால், இவர் ‘உரைநடை தந்தை’ என அழைக்கப்பட்டார். உரைநடை தந்தை என்று இன்றளவும் போற்றி வருபவர் நிச்சயமாக தமிழர் கிடையாது. தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் எழுதியவரும் இவர் தான். பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார். 
அந்தக் காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டு வந்தார். இன்று நாம் பயன்படுத்தும் ஆ,ஏ, ஓ ஆகிய எழுத்துக்கள் எல்லாம் வீரமாமுனிவர் கொண்டு வந்த திருத்தங்கள் தான். தமிழ் மொழியை எங்கே இத்தாலியில் பிறந்த ஒருவர், அதன் பெருமை உணர்ந்து திருத்தியதை அப்போது யாரும் எதிர்க்கவில்லை. தமிழர்கள், நம்பி வந்தோரை வாழ வைத்தார்கள். இவரைப் போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை. தமிழில் 23 நூல்களை எழுதிய வீரமாமுனிவர் தமிழ் மட்டுமின்றி ஒன்பது மொழிகளில் புலமைப் பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்த இவர் தனது 67ஆவது வயதில் இயற்கை எய்தினார். இதுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தமா?

rajini

தான் முன்பு சொன்னதைப் போலவே சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று ரஜினி வேலைப் பார்த்து வருகிறார். தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார். தமிழர்களை ஆள்வதற்கு தமிழராய் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அப்படி தமிழர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று யார் வந்தாலும் அவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்த மாநிலம் தமிழகம்.