தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துணிந்த பாஜக – அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து, திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின் அறிக்கை

 

தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துணிந்த பாஜக – அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து, திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின் அறிக்கை

ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது.

ஹைட்ரோகார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும், ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதனால் பாதிப்பும்  ஏதும் இருக்காது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கேட்க வேண்டும் என்றும் அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மக்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது. 

ttn

ஆனால் சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் இந்த திட்டத்தை செயல் படுத்தலாம் என்னும் சூழல் நிலவி வருகிறது.  இதற்கு, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ttn

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘”விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்ப பெற்றும்- காவேரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலமாக அறிவிக்கவும், விவசாய விரோதிகளான பா.ஜ.க, அதிமுக அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வரும் 28 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட பட்டுள்ளது. 

மேலும் மு.க ஸ்டாலின் ‘ இதுவரை எந்த மத்திய அரசும் இப்படி சர்வாதிகாரமாக, விளைநிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  நிறைவேற்ற முயன்றதில்லை.தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துணிந்த பாஜக – அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து  ஜன 28 அன்று, 5 மாவட்டங்களில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.