தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

 

தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு!

தமிழகத்தில் நேற்று 104  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,162ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1,210-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 922 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம் என அறிவுறுட்தியது, இதனால் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.  இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வோரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த  வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.