தமிழகத்தில் #TikTok தடைக்கு நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

 

தமிழகத்தில் #TikTok தடைக்கு நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என எம்எல்ஏ தமீமுன் அன்சாரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்

சென்னை: தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என எம்எல்ஏ தமீமுன் அன்சாரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுது போக்காக உள்ளது. எனினும், இந்த செயலிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவல் நிலைய வாயில், காவல் வாகனம் உள்ளிட்டவற்றில் டிக் டாக் செய்து பதிவிட்ட சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் இந்த டிக் டாக் செயலி மூலம் பெண்களுக்கு வலை விரிப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது, பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், உள்ள டிக்டாக் செயலிக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், #Bluewhale போன்று #TikTok தடை செய்ய மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.