தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா இல்லை! இதில் உங்கள் மாவட்டம் இருக்கா?

 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா இல்லை! இதில் உங்கள் மாவட்டம் இருக்கா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 434பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூரை தொடர்ந்து சேலமும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 146 நபர்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஆரம்பத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த ஈரோடு தான் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட முதல் மாவட்டமாக மாறியது. ஈரோட்டில் 70 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் குணம் அடைந்தனர். ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.

ttn

இதேபோல் நாமக்கலுல் கடந்த மாதம் முதல்  77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள், நாமக்கல், சேலம், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அனைவரும் பூரண குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன் மூலம், நாமக்கல் மாவட்டம், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு செவிலியர் உட்பட 114 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக சிவப்பு பட்டியலில் இருந்த மாவட்டம், ஆரஞ்சு பட்டியலுக்கு மாறி, கொரோனா இல்லாத மாவட்டம் என்ற நிலையை எட்டியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களின் பட்டியலில் சேர்ந்நது சேலம். சேலத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.