தமிழகத்தில் 3 நாட்களில் வெங்காய விலை குறையும்: தமிழக அரசு அதிரடி!

 

தமிழகத்தில் 3 நாட்களில் வெங்காய விலை குறையும்: தமிழக அரசு அதிரடி!

இன்னும் 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் அவ்வாறு விலை குறையவில்லை என்றாலும் அரசே கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்கப் போவதாகவும் அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

வெங்காயம் அதிகமாக விளையும் இடங்களில் மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் விலை சுமார் 60 முதல் 80 ரூபாய்க்கு விற்கப் பட்டு வருகிறது. இது குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடை பெற்றது. 

Onion

தனியாரிடம் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு குறைந்த விலையில் விற்கப்படும் என்ற ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தமிழக அரசு இன்னும் 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் அவ்வாறு விலை குறையவில்லை என்றாலும் அரசே கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்கப் போவதாகவும் அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.