தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

 

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தர்ம புரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

rain

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தர்ம புரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதே போன்று புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை இம்மாதம் 14-ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

rain

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நாளை பள்ளிகள் இயங்குமா அல்லது விடுமுறையா என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பெரும்பாலான பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த மழை அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று பெற்றோர்கள் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றனர். எனினும், இதுவரையில் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து எந்தவிதமான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை!