தமிழகத்தில் 2 கட்சி தான் திராவிட கட்சி.. மீதி எல்லாம் சில்லறை கட்சி : அமைச்சர் செல்லூர் ராஜுவின் சர்ச்சை பேச்சு !

 

தமிழகத்தில் 2 கட்சி தான் திராவிட கட்சி.. மீதி எல்லாம் சில்லறை கட்சி : அமைச்சர் செல்லூர் ராஜுவின் சர்ச்சை பேச்சு !

பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்குத் தமிழகமே எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை இன்னும் பலப்படுத்தியது.

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுகவுடன் பாமக,பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்திலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்குத் தமிழகமே எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை இன்னும் பலப்படுத்தியது. திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே நடக்கும் பிரச்னை போல, அதிமுகவில் எந்த பிரச்சனையும் வரவில்லை. 

ttn

கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 103 ஆவது பிறந்தநாளையொட்டி அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடந்து வருகிறது. அதே போல, எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று மதுரையிலும் நடைபெற்றது. அப்போது, அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மீதமுள்ள அனைத்து கட்சிகளும் சில்லறை கட்சிகள் என்று கூறினார். கூட்டணிக் கட்சிகளுக்கிடையே சுமுகமான உறவை நீடிக்க அதிமுக முயற்சி எடுத்தும் வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியது கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.