தமிழகத்தில் விபத்துக்கு காரணமான இடங்கள் 846

 

தமிழகத்தில் விபத்துக்கு காரணமான இடங்கள் 846

தமிழகத்தில் விபத்துக்கு காரணமான இடங்கள் 846 ! பட்டியலிட்டது மத்திய அரசு ! விபத்துக்கு காரணம் வாகன ஓட்டிகளா? சாலைகளின் தரமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் விபத்துகள் நடக்கும் இடமாக 846 பகுதிகளை அடையாளப்படுத்தி உள்ளது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்.

இதனால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் அறிக்கை ஒன்றை தமிழக தலைமை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் அதிகம் விபத்து நடந்த இடமாக சென்னையில் சிடிஎச் சாலை, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் பகுதிகளில்தான் அதிகம் விபத்து நேரிட்ட சந்திப்பு பகுதி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அங்கு மட்டும் 775 விபத்துகள் கடந்த 3 ஆண்டில் நடைபெற்றுள்ளன.

பெங்களூருசென்னை நெடுஞ்சாலையில் நஸரத்பேட்டை சந்திப்பில் 520 விபத்துகள் நடந்துள்ளதாகவம், அதே போல தாம்பரம்புழல் புறவழிச் சாலையில் போரூர் டோல்கேட் பகுதியில் 423 விபத்துகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது. இந்த 3 இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், தேசிய நெடுஞ்சாலை துறையின் தமிழக பிரிவானது, ஏற்கெனவே 128 இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்து விட்டதாகவும், 197 இடங்களில் இனி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதே சமயம் பொதுமக்களும் சாலை விதிகளே துச்சமென மதிப்பதால் விபத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. எங்கேயோ விபத்து குறித்து செய்திகள் காதில் விழும்போது அதில் அஜாக்கிரதை உள்ளது என்பதை புரிந்துகொள்ளும் மக்கள் தான் மட்டும் அந்த விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டுவதில்லை. பின்னர் அந்த விபத்து தனக்கு நேரும்போது மருத்துவமனை, இன்சூரன்ஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை