தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது

 

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது

2020 ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

2020 ஜனவரி மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மட்டும் அடுத்த மாதம் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது. சில பண்டிகைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்படுவதால் மாநிலத்துக்கு மாநிலம் விடுமுறை நாட்களில் வித்தியாசம் வரும். வங்கி விடுமுறை தினங்களை மனதில் வைத்து உங்களது வங்கி வேலைகளை திட்டுமிட்டு கொள்ளுங்கள்.

ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 2 குரு கோபிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகளுக்கு லீவு
ஜனவரி 3 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்
ஜனவரி 7 ஜமோயினு ரப்தா கொண்டாட்டத்தை முன்னிட்டு மணிப்பூரில் வங்கிகளுக்கு                                        விடுமுறை
ஜனவரி 8 கான்-காய் முன்னிட்டு மணிப்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை

வார இறுதி விடுமுறை தினங்கள்

ஜனவரி 11 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை
ஜனவரி 14 மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 15 உத்தராயண பண்யகலா மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு, துசு பூஜை முன்னிட்டு                     கர்நாடகா,  தமிழ்நாடு, அசாம் மற்றும் தெலங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை

உழவர் திருநாள்

ஜனவரி 17 உழவர் திருநாள் முன்னிட்டு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைநாள்
ஜனவரி 23 நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள் முன்னிட்டு திரிபுரா மற்றும் மேற்கு                                         வங்கத்தில் வங்கிகளுக்கு  விடுமுறை
ஜனவரி 25 மாதத்தின் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை
ஜனவரி 30 பசந்த பஞ்சமியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை