தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இத்தாலி நாடு இந்த  வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது.

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இத்தாலி நாடு இந்த  வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 8950 பேர் கரோனா தொற்று இருக்கலாம் என கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறார்கள்.54 பேர் கரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

corona ward

தற்போது, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கும், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.