தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக 700-க்கும் அதிகமானோரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது ஆண் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், 55 வயது கொண்ட பெண்மணி ஒருவர் சைதாப்பேட்டையிலும், லண்டனில் இருந்து வந்த 25 வயது வாலிபர் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 116 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பாதிப்பு குறித்து சோதிக்கப்பட்டுள்ளது.