தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு முதல்வரிடம் பரிந்துரை

 

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு முதல்வரிடம் பரிந்துரை

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ttn

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று முதல்வர் காணொளி வாயிலாக, தலைமை செயலகத்தில் இருந்து மருத்துவக் வல்லுநர் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் மேலும் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.