தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 1,477ஆக அதிகரிப்பு!!

 

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 1,477ஆக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23லட்சத்து 46ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1242பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23லட்சத்து 46ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1242பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

coronavirus

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தமிழகத்தில் மேலும் 105பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 411 பேர் கொரோனாவிலிருந்து சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.