தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டுவர இதுவே சிறந்த வாய்ப்பு: தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

 

தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டுவர இதுவே  சிறந்த வாய்ப்பு: தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

நாள் அதிகமாகி கொண்டே செல்வதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன்  பேச்சுவார்தை நடத்தி வருகிறார். 

 கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்வதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன்  பேச்சுவார்தை நடத்தி வருகிறார். 

இருப்பினும் இந்த ஊராடங்கால் மதுக்கடைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளது. இதனால் குடிமகன்கள் விரக்தியில் இருந்தாலும் அவர்களின் குடும்பத்தார் நிம்மதியாகவே உள்ளனர். 

gg

இந்நிலையில் மதுக்கடைகள் மூடபட்டுள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  “எல்லா இன்னல்களிலும் நன்மை விளைவது போல, இந்த ஊராடங்கால் கிடைக்கப்பெற்ற நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பது தான்.மகாத்மா தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை  கருணாநிதி அரசு நீக்கியது.

குடும்பங்கள் சீரழிக்கின்றன. ஆண்மை பறிபோகிறது. தகுந்த தலைவன் இல்லாத குடும்பம் தத்தளிக்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

tt

குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது. தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். என தமிழகத்தின் அனைத்து தாய்மார்களின் சார்பில் தமிழக அரசை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் “என்று பதிவிட்டுள்ளார்.