தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது வேதாரண்யம் – நாகை இடையேகரையை கடந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கஜா புயல் கரையை கடந்த பிறகு, தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று காலை தடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.