தமிழகத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு; சத்ய பிரதா சாஹூ தகவல்!

 

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு; சத்ய பிரதா சாஹூ தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது

சென்னை: தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதியன்று வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

poll

தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தாலும், வாக்குப்பதிவின் போது, பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஏராளமான குளறுபடிகள், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பாப்பிரெட்டிபட்டி, கடலூர், திருவள்ளூர், பூந்தமல்லி, கடலூர், தருமபுரி மாபட்டங்களில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துரைத்திருந்தார்.

election commission

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாஹூ அறிக்கை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேனி உள்பட 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒருவேளை 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.