தமிழகத்தில் மருத்துவர்கள், பத்திரிக்கையாளருக்கு கொரோனா தொற்று!

 

தமிழகத்தில் மருத்துவர்கள், பத்திரிக்கையாளருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  690 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  690 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில்,கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 3 அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

கோவை பெண் மருத்துவர் ஈரோடு நபரிடமிருந்து தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்திருப்பவர். தூத்துக்குடி  காயல்பட்டினம் அரசு மருத்துவர் டெல்லி சென்று வந்தவர். 50 க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தவர். தற்போது சிகிச்சையில் இருக்கிறார். மேலும் ஒரு மருத்துவர் சென்னையை சேர்ந்தவர்.

 

கொரோனா வைரஸ்

இதேபோல் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் மணிகண்டன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மணி கண்டன் டெல்லி மாநாட்டிற்கு சென்றதாகவும், அதனாலேயே தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பேஸ்புக்கில் பதிவு போட்டுள்ளார்.