தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரண்டு நாட்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரண்டு நாட்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரண்டு நாட்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது வலுப்பெற்று புயலாகவும், 12-ம் தேதி தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஒரு வேளை புயலாக மாறினால் சென்னை – விசாகப்பட்டினம் இடையே நெல்லூரில் கரையைக் கடக்கும் என்றும் கணித்துள்ளது.

இந்த புயலுக்கு தாய்லாந்து சார்பில் பேய்ட்டி என பெயர் சூட்டப்பட உள்ளது. இருப்பினும் தாழ்வு நிலை வலுப்பெறுவதைப் பொறுத்தே புயலுக்கான வாய்ப்பு குறித்து உறுதியாக கூற முடியும் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை. புயல் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.