தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்க தடை!

 

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்க தடை!

குடும்ப அட்டை மனுக்களை  பரிசீலனை செய்து வைத்து கொள்ளலாமே தவிர அதற்கு எந்த உறுதிச்சீட்டும் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  கடந்த 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ttn

குறிப்பாக குடும்ப அட்டை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் குடும்ப அட்டை தொடர்பாக  சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால்  புதிய அட்டைக்கான மனுக்கள் அல்லது புதிய குடும்ப அட்டைகளை வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது . ஆன்லைன் மூலம் பெறப்படும் புதிய குடும்ப அட்டை மனுக்களை  பரிசீலனை செய்து வைத்து கொள்ளலாமே தவிர அதற்கு எந்த உறுதிச்சீட்டும் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ttn

அதேபோல் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் பெயர் திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ள கூடாது. குறிப்பாக நியாய விலை கடைகளில் அரசியல் பிரமுகர்களின் போஸ்டர்கள் இருக்கக் கூடாது’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.