தமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

 

தமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது.

tt

தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. அதில்  சென்னையில் 156பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊடரங்கை மீறி மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

t

இந்நிலையில்  ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில்  சில பொருட்களுக்கு  தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  அதாவது  பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே இருந்த சரக்குகள் விற்பனையாகிவிட்டதால் மளிகைக்கடைகளில் பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.