தமிழகத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கும் மின்சார பைக் நிறுவனம்!

தமிழகத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கும் மின்சார பைக் நிறுவனம்!

மின்சாரத்தில் இயங்கும் கார், பைக்தான் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. இதனால், மின் மோட்டார் சைக்கிள், கார் உற்பத்திக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில், தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பைக் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளதாகவும் இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

job

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஏத்தெர் எனெர்ஜி என்ற நிறுவனத்துடன் தமிழகத்தில் மின்சார பைக்கை தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஓசூரில் பைக் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

bike

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஓசூர் அருகே சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதி நவீன தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த நிறுவனத்துக்கான நில ஒதுக்கீடு முடிந்துவிட்டதாகவும் விரைவில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

company

. இந்த தொழிற்சாலை செயல்பட்டுக்கு வரும்போது, இங்கு ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் மின்சார பைக்குகள் தயாரிக்கப்படும் என்றும் இந்தியாவில் வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஓசூரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் நேரடியாக 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.