தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம்: ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட காயத்ரி ரகுராம்

 

தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம்: ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. 

இதில் பாஜக 351 தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில்  முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 94  தொகுதிகளிலும், மற்றவை 104 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இதனால் பாஜக பெருபான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் பாஜகவின் நீண்ட நாள் கனவான தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் போர்முழக்கம் இந்தமுறையும் எடுபடாமல் போயுள்ளது. 

இந்நிலையில் பாஜகவில் அங்கம் வகித்து சில தினங்களுக்கு முன்பாக  பா.ஜ.கவிலிருந்து பிரேக் எடுக்கிறேன் என்று சொன்ன காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கத்தில், ‘எங்களுடன் மோடி இருக்கும்போது இன்னும் வலிமையாக இருக்கிறோம். மோடி, இந்தியாவை மீண்டும் பெருமைப்பட வைப்பார்’என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், ‘கோயம்புத்தூரிலும், கன்னியாகுமரியிலும் பா.ஜ.க தங்களுடைய பெஸ்டை கொடுத்தும் இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெருமையுடன்தான் தோற்கிறோம். தமிழகத்தில் எதிர்பார்த்தபடியே தி.மு.க வெற்றி முகத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், வெற்றிகரமான தோல்விக்கு வாழ்த்துக்கள். தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு, வந்தாரை வாழவும் வைப்போம் வாலாட்டுன வெளுத்தும் காட்டுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.