தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்… பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

 

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்… பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள் என கே.டி.ராகவன் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள் என கே.டி.ராகவன் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் நமோ செயலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம், வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் நேற்று அதில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.

modi

பிரதமர் மோடி பேசியதை அடுத்து பாஜக நிர்வாகிகளிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராகவன் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இருந்தார்கள். அந்த இரண்டு ஆளுமைகளும் தற்போது இல்லை. இதை பயன்படுத்தி கொள்ள கட்சியின் தலைமை தீர்மானித்துவிட்டது. ஜனவரியிலிருந்து பாஜகவின் ஆட்டத்தைக் காண நீங்கள் தயாராக இருங்கள் என்று பேசினார்.

ragavan

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் அதிமுகவை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்றையும் சாதிக்க முடியாது என நினைக்கும் டெல்லி, தனக்கு எதிராக தமிழகத்தில் உருவாகி இருக்கும் அதிருப்தியையும், கூட்டணியையும் சமாளிக்க அமமுகவையும், அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் சமீபகாலமாக இணைப்பு படல பேச்சுக்கள் வெளிப்படுகிறது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். 

sasi

மேலும், சிறையில் இருக்கும் சசிகலா கூடிய விரைவில் டெல்லி பரிந்துரையின் பேரில் விடுதலை ஆகலாம். விடுதலை ஆன பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகலாம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்தால் டிடிவி தினகரனின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தாலும், அதுகுறித்து தற்போது டெல்லி கவலைப்படவில்லை. சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்த பிறகு டிடிவியையும் அதிமுகவில் இணைக்கும் விதமாக அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க பாஜக பரிந்துரை செய்யும் என்கிறார்கள் அவர்கள். அதேசமயம், முதல்வர் கனவோடு வலம் வரும் டிடிவி தினகரன் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பது சந்தேகமே எனவும் டிடிவி வட்டாரம் கூறுகிறது.

tt dhinakaran

இந்த நிலையில்தான் கே.டி.ராகவன், பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள் என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சை அலட்சியப்படுத்தக்கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக மோடியும், பாஜக தலைமையும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் எனவே ஜனவரி மாதத்தில் இருந்து பாஜக தமிழகத்தில் மீண்டும் தனது அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்து வைக்க இருப்பதால் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.