தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர். மதுப் பிரியர்களின் தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர். மதுப் பிரியர்களின் தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைத்தையும் தாண்டி பல மது வகைகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியானது. மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்டாக் காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 160 கோடிக்கு மது விற்பனையானதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

டாஸ்மாக்

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.