தமிழகத்தில் நாளை நடக்கப்போவது என்ன..? அலறித்துடிக்கும் அதிகாரிகள்..!

 

தமிழகத்தில் நாளை நடக்கப்போவது என்ன..? அலறித்துடிக்கும் அதிகாரிகள்..!

நாளை நடக்கப்போவதை நினைத்து போலீஸ் முதல் வருவாய், ஒன்றிய அதிகாரிகள் என அனைவரும் நர்டுங்குகிறார்கள். சிலர் பொங்கலுக்கு பிறகு அலுவலகம் வரலாமா என யோசிக்கிறார்கள்.

ஜனவரி 11ம் தேதியான நாளை தான் மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே சென்சிடிவ்வான ஒன்றியங்கள், உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்த வித்தியாசம், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள  ஒன்றியங்கள், அதிக வருவாய் வரும் ஒன்றியங்கள், ஊராட்சிகள் போன்றவற்றில் தலைவர், துணைத் தலைவர் பதவியை பிடிக்க அதிமுக தரப்பு பகீரத்தன முயற்சியில் இறங்கி உள்ளது.

மற்றொருபுறம் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தனக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் தலைவர் பதவியை பிடிக்க தயாராக இருக்கிறது. இதுகுறித்த பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளர்களும், கூட்டணி தலைவர்களும் அனுப்பி இருக்கிறார்கள்.

ops

அதற்காக தனியாக பேசி இந்த இடத்தில் எல்லாம் நமக்கு வேண்டிய காவல்துறை அதிகாரிகளை டூட்டியில் போடுங்கள். நமக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்தலில் பயன்படுத்துங்கள். இது கவுரவ பிரச்னை. மக்கள்  ஓட்டுபோடவில்லையென்றாலும் சுயேச்சைகள் மற்றும் சிலரை விலைக்கு வாங்கியாவது நம்ம மாவட்டத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அதை அப்படியே அதிமுக தரப்பு வாய்மொழி உத்தரவாக தங்களுக்கு  வேண்டியவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், காக்கி அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதிமுக தரப்பு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் குறைந்த இடத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் அங்கேயும்  தலைவர் பதவியை ஆளும் அதிகாரத்தை கொண்டு கைப்பற்றப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.

stalin

இது சில கவுன்சிலர்களுக்கு தெரியவர, அவர்களும் எச்சரிக்கையுடனும் ஆள் பலத்துடனும் ஜனவரி 11ம் தேதி தலைவர் தேர்தலுக்கு வர  இருக்கிறார்கள். மறைமுக தேர்தலில் எத்தனை சேர் பறக்குமோ… எத்தனை இடங்களில் சாலை மறியல், அடிதடி நடக்குமோ என்ற எண்ணத்தில் ஒன்றிய, கிராம அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நடுக்கத்தில் உள்ளனர்.