தமிழகத்தில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை: ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

 

தமிழகத்தில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை: ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்காக ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் நாளை அக்டோபர் 7-ஆம் தேதி மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை இல்லை என்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள் கடல் படுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.