தமிழகத்தில் தொடங்கியது “அக்னி நட்சத்திரம்”..அடுத்த 24 நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும்!

 

தமிழகத்தில் தொடங்கியது “அக்னி நட்சத்திரம்”..அடுத்த 24 நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே சில நாட்களுக்கு முன் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது மீண்டும் வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மக்களை இன்னும் வாட்டி வதைக்க இன்று முதல் தமிழகத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 

ttn

அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றால் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக நம் மீது விழுவதாகும். அச்சமயம் வெயில் அதிகமாகி மக்களுக்கு தோல் நோய் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது கத்திரியும் தொடங்கி விட்டதால் வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்குமாம். இந்த கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.