தமிழகத்தில் டிசம்பர் 1 வரையில் கனமழை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 1 வரையில் கனமழை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.  இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த மழை, டிசம்பர் 1ம் தேதி வரையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இந்நிலையில் நேற்று இரவு முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காஞ்சிபுரத்தில் 206.2மிமி மழை பதிவாகியுள்ளது. சென்னையில், 10 மிமி மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில்,  சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, தாம்பரத்தில் 146 மிமி மழை பதிவாகியுள்ளதாக வெதர்மேன் பிரதீப் பதிவு செய்துள்ளார். 

exams

கன மழையின் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.  இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.