தமிழகத்தில் ஜூனுக்கு பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

 

தமிழகத்தில் ஜூனுக்கு பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனிடையே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனிடையே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்தார்

 

 

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.