தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

 

தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.  கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். 

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மீண்டும் ஊரடங்கை  வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

dd

அதேபோல தமிழகத்தில் மேலும் 64பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் ஊராடங்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  வீடுகளில் முடங்கியுள்ள  மக்களுக்கு உதவும் வண்ணம் சில நடைமுறைகளையும் கொண்டு வருகிறது. 

t

இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டவேண்டிய சொத்துவரி, குடிநீர்கட்டணம் போன்றவற்றை செலுத்த ஜூன்.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று மாத கால  அவகாசத்திற்கு எந்த அபராதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.