தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது கட்டத்தில் உள்ளது. மூன்றாம் நிலை செல்லாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

corona

இன்று மூன்று புதிய கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியபட்டுள்ளனர். அவர்கள் தஞ்சை, மதுரையை சேர்ந்தவர்கள். தற்போது வரை 1500 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 41 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17000 நோயல்களிக்கு சிகிச்சை அளிக்க தனிமை படுத்தப்பட்ட பிரிவு தயராக உள்ளது. நோய் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்கிறோம். சென்னை, கோவை, வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், ஆகிய 10 மாவட்ட கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.