தமிழகத்தில் கொரோனாவை எதிர்க்க விரைவில் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கப்படும் – மருத்துவக் கல்வி இயக்குநர்

 

தமிழகத்தில் கொரோனாவை எதிர்க்க விரைவில் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கப்படும் – மருத்துவக் கல்வி இயக்குநர்

தமிழகத்தில் கொரோனாவை எதிர்க்க விரைவில் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை எதிர்க்க விரைவில் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடிகிறது.

covid 19

ஆனால் பிளாஸ்மா முறையில் கொரோனா பாதிப்பு குணப்படுத்தப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு தேவையான எல்லா முதல் கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், கூடிய விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறியுள்ளார்.