தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்வு!

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. 50 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 70 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது.  

ttn

குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மீதமுள்ள அந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.