தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

 

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புத்தாண்டு தொடங்கியதிலிருந்து  ‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் சீனாவில் உள்ள வுகான் நகரின் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த காய்ச்சல் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்த பரவும்  புதிய வகை வைரஸ் காய்ச்சல் இந்தியாவிற்குள் பரவாமல் இருக்கச் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும், சீனாவிலிருந்து வரும் நபர்களுக்கும் ஸ்கீரீனிங் என்னும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகே வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் நம் நாட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். நேற்று கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இது மக்களைப் பீதி அடையச் செய்தது. 

ttn

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சீனாவிலிருந்து வரும் அனைத்து நபர்களும் உரியப் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரித்துள்ளார்.