தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி எம்.எல்.ஏ க்களின் பட்டியலில் இன்னொரு தொகுதியும் சேரப்போகிறது!?

 

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி எம்.எல்.ஏ க்களின் பட்டியலில் இன்னொரு தொகுதியும் சேரப்போகிறது!?

சென்னை: ஏற்கனவே தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில்,
அடுத்தபடியாக நாகபட்டிணம் தொகுதியும் காலியாகப் போகிறது.

நாகபட்டிணம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் தமீமுன் அன்சாரி. இவர் கடந்த தேர்தலில் அதிமுக  கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்தவர்.

தற்போது அதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருப்பதை எதிர்த்து அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்டிருக்கிறார். தமீமுன் அன்சாரி ஏற்கனவே டி.டி.வி தினகரனை சந்தித்து பேசியதாகச் செய்திகள் உலவிய நிலையில் , இப்போது அவர் அ.ம.மு.க சார்பாக இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. இதனால் நாகபட்டிணம் தொகுதியும் காலியாகப்போகிறது.

பாராளுமன்ற தேர்தலோடு தமிழக இடைத்தேர்தலும் நடக்க இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கையில், இது மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது. அப்படி இடைத்தேர்தல் வந்தால்,அ.தி.மு.க குறைந்தது ஆறு இடங்களில் வென்றே ஆக வேண்டும். இதோடு பா.ம.க மற்றும் பி.ஜே.பிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நின்று ஜெயித்த எம்.பிக்கள் இப்போது போர்க்கொடி உயர்த்தக்கூடும் என்பதும் தமிழக அரசியலில் இன்னொரு எதிர்பார்ப்பாக இருக்கிறது.