தமிழகத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தினை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

 

தமிழகத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தினை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

கார்த்திகை மாத அமாவாசை தினமான இன்று பல்வேறு கடற்கரை கோயில்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதை நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகிறோம்.

karthikai

ஒவ்வொரு மாத அமாவாசை தினமும் ஒவ்வொரு சிறப்புகளை தன்னகத்தே பெற்றுள்ளது. அதே மாதிரிதான் கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று மதியம் முதல் நாளை மதியம் வரை கார்த்திகை மாத அமாவாசை தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து அவர்களை வழிபாடு செய்வதன் மூலம் சகல விதமான நன்மைகளையும் பெறலாம்.

karthigai

மகான் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை நதியே பிரவாகமெடுத்து வந்தது இந்தக் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான்.

அதனால், இந்த புண்ணிய தினத்தில் நீர் நிலைகளில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம்.

குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு வாய்ந்த பரிகாரமாகும். பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும்.

karthigai

இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத அமாவாசை தினத்தினை முன்னிட்டு தமிழகத்தில் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம்,திருச்செந்தூர்,ஸ்ரீ ரங்கம்,திருநெல்வேலி,ஸ்ரீ தேவி பட்டினம்,போன்ற பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களை திருப்தி படுத்தும் விதமாக தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.