தமிழகத்தில் கனமழை தொடரும்…எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

தமிழகத்தில் கனமழை  தொடரும்…எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  சூறைக்காற்று வீசக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும்,  கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். 

rain

சென்னையைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள அவர்,  மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  சூறைக்காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள்  இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

தமிழகத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழையும்,குன்னூரில் 13 சென்டி மீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 10  சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.