தமிழகத்தில் கடும் வெயில்… லேசான மழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடும் வெயில்… லேசான மழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கைவிடுத்தள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கைவிடுத்தள்ளது.

tamilandu-weather-center

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நாளை (16ம் தேதி) முதல் 19 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கவும் செய்யும். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் இதனால், காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
வட தமிழகத்தில் வறட்சியான வாணிலையே காணப்படும். சென்னையிலும் வறட்சியான வானிலையே இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளது.