தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தொடர்ந்து வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. விமான நிலையத்தில் ஒரு லட்சத்து 33792 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தட்டு உள்ளனர். அவர்களில் 1137 நபர்கள் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது. 

vijayabaskar

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் யாரும் பயமோ, பதட்டமோ அடையவேண்டியதில்லை.  பரிசோதனை செய்யப்பட்ட  62 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உள்ளது மற்ற யாருக்கும் இல்லை. பாரம்பரிய மருந்துகளை அதாவது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எதையும் உட்கொள்ளலாம். 

சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஏதேனும் தவறான வதந்திகளை பரப்பினால் சுகாதாரத்துறை சார்பில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.