தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தகவல்

 

தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எதிர்வரவிருகும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட் அலெர்ட் வானிலை எச்சிக்கை, வழக்குகள் உள்ளிட்டவைகளை சுட்டி காட்டி தலைமை செயலர் கேட்டுக் கொண்டதால் இந்த தொகுதிகளுக்கு பின்னர் இடைத்தேர்தல் நடத்தபப்டும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த 18 தொகுதிகள் உள்பட ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி மாதத்திற்குள் நடத்தப்படும் என ஓ.பி.ராவத் தெரிவித்திருந்தார். அதேபோல், நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்காமல் முன்கூட்டியே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.