தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

 

தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியன்று தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தீபாவளியன்று தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, உற்பத்திக்கோ தடை இல்லை என உத்தரவிட்டது.மேலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதையடுத்து பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கமுடியாது. இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். அந்த நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தீபாவளியன்று தமிழகத்தில் அதிகாலை 4 – 5 மணி வரை ஒரு மணி நேரமும், இரவு 9 – 10 மணி வரை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த நேரங்களை உச்ச நீதிமன்றம் இறுதி செய்துள்ளது.